டெல்லி:இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர்," கேரளா, மகராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டாக்டே புயல் எச்சரிக்கையால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தப்புயலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு வேண்டிய உதவிகளை காங்கிரஸ் தொண்டர்கள் செய்யவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வுத்துறை அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாகவும், அது மே 16ஆம் தேதிக்குள் புயலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், புயல் எச்சரிக்கையாக மே 17ஆம் தேதிவரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.