தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது - பாலச்சந்திரன் சொன்னது என்ன?

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகில் கரையைக் கடந்தது என தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Etv Bharatமாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகில் கரையை கடந்தது
Etv Bharatமாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகில் கரையை கடந்தது

By

Published : Dec 10, 2022, 10:31 AM IST

சென்னை:நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் மாண்டஸ் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகில் கரையைக் கடந்துள்ளது. இது தொடந்து வலுவிழந்து, காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் தொடர்ந்து இன்று(டிச.10) மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும். இது வட உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும். இதன் காரணமாக தற்போது கிடைத்த நிலவரப்படி, சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ, வில்லிவாக்கத்தில் 6 செ.மீ, புழலில் 10 செ.மீ, பூந்தமல்லியில் 10 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் காற்றின் வேகம் 70 கிலோ மீட்டராக பதிவாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து மாண்டஸ் புயல் குறித்தான தகவல்கள் கொடுக்கப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:கரையைக் கடந்தது மாண்டஸ் - சென்னையில் கோர தாண்டவம்

ABOUT THE AUTHOR

...view details