தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் - 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் தற்போது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல்
6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல்

By

Published : Dec 8, 2022, 10:32 AM IST

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் வேகம் குறைந்தது. இன்று அதிகாலை, மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. தற்போது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது, நேற்று (டிச.7) புயலாக வலுப்பெற்றது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், அன்று இரவு 11.30 மணி நிலவரப்படி, காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 560 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கி.மீ. தூரத்திலும் நிலைகொண்டிருந்தது.

இப்புயலுக்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் - புதுச்சேரி - தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை (டிச.9) நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (டிச.8) காலை 05.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 530 கி.மீ. தொலைவிலும் மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் நிலவியது.

இதையும் படிங்க: சென்னை வந்த விமானத்தில் சஹாரா நரிகள் கடத்தல்.. குருவி கூறிய பலே காரணம்?

ABOUT THE AUTHOR

...view details