வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திரிகோணமலை, முல்லைத்தீவு இடையில் கரையைக் கடந்துள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் திரிகோணமலையின் வடக்கே புயல் கரையைக் கடந்துள்ளது.
புரெவி புயல் கன்னியாகுமரியிலிருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்குப் பகுதியில் நிலைகொண்டது. புயல் கரையைக் கடந்துவரும் நிலையில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது.
நாளை (டிச. 04) புரெவி புயல் பாம்பன் கரையை நோக்கி வருகிறது. இன்று (டிச. 03) பாம்பன் அருகே பிற்பகலில் வரும் புரெவி புயல் பாம்பன் -கன்னியாகுமரி இடையே நள்ளிரவு அல்லது, டிசம்பர் 4ஆம் தேதி கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரெவி புயல் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது. புரெவி புயலையொட்டி ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது.
இதையும் படிங்க:மயிலாடுதுறை மீனவ கிராமங்களில் கடல் சீற்றம்!