தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையினருக்கு தண்ணி காட்டிய பலே திருடன் கைது! - சென்னை கிரைம் செய்திகள்

சென்னை: நீண்ட நாள்களாக பிடிபடாமல், காவல்துறையினருக்கு தண்ணி காட்டி வந்த பலே சைக்கிள் திருடனை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

திருடன் கைது
திருடன் கைது

By

Published : Apr 10, 2021, 7:43 PM IST

சென்னை மாவட்டம் பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியை சேர்ந்தவர் குமார் (32). ஹார்டுவேர் கடையில் வேலை பார்ப்பதாக வீட்டில் சொல்லிவிட்டு, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சிட்லபாக்கம் பகுதிகளில் பூட்டாமல் இருக்கும் சைக்கிள்களை நோட்டமிட்டுத் திருடி, வட மாநில நபர்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், குமார் நேற்று பம்மல் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ராஜகோபால்(56) என்பவரது மகளின் சைக்கிளைக் குமார் திருடியுள்ளார். இதுகுறித்து ராஜகோபால், சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

காவலர்களின் விசாரணையில், சைக்கிளைத் திருடியது திருநீர்மலையைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, குமாரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம், காவலர்களையே அதிரவைத்து அசைத்துப் பார்த்தது.

குமார் தனது வாக்குமூலத்தில், ஹார்ட்வேர்சில் வேலைக்குச் செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பி புறநகர்ப் பகுதி முழுவதும் நோட்டமிட்டு, பூட்டாத சைக்கிளைத் திருடி விற்பனை செய்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். அடுத்து அவர் சொன்னது தான் காவலர்களை அதிரச் செய்துள்ளது. அதாவது, சைக்கிள் திருடு போனால் யாரும் காவல்துறையில் புகார் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும், காவல்துறையினர் அதை பெரிதாகக் கண்டு கொள்வதில்லை என்பதால் சைக்கிளை மட்டும் குறி வைத்துத் திருடியதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து 60 சைக்கிள்களை மீட்ட காவல்துறையினர், குமார் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன்பு முன்னிருத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவு: மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது!

ABOUT THE AUTHOR

...view details