தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - டிஜிபி தொடங்கி வைப்பு

சென்னையில் மார்பக புற்று நோய் மற்றும் மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 150 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பேரணியை காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்.

மனநலம், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
மனநலம், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

By

Published : Oct 2, 2022, 12:58 PM IST

சென்னை:குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் மார்பக புற்று நோய் மற்றும் மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி நடைபெற்றது. 150 கிலோ மீட்டர் மற்றும் 50 கிலோ மீட்டர் தூரம் என்று இரண்டு பிரிவுகளாக நடத்தபட்ட இந்த பேரணியினை தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சைக்கிள் பேரணி

இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டுனர்கள் கலந்து கொண்டு ஜி.எஸ்.டி சாலை, மீஞ்சூர் வண்டலூர் புறவழி சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியே சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டிஜிபி சைலேந்திரபாபு

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு, ”சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சி மட்டுமல்ல, மனநலனை மேம்படுத்த கூடியது. அதனை வலியுறுத்தியே இந்த பேரணி நடத்தப்படுகிறது. இதுபோன்ற சைக்கிள் பேரணிகள் மற்றவர்களையும் ஊக்கபடுத்தும். ஆரோக்யமான சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்” என்றார்.

இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரி மனைவியை ஆபாசமாக பேசியதாக கே.எஸ் அழகிரி உறவினர்கள் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details