தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார்? சைபர் கிரைம் காவல் துறை ட்விட்டருக்கு கடிதம் - chennai cyber crime letter to twitter

நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார் என்ற விவரங்களைக் கேட்டு, சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர், ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

cybercrime
குஷ்பு

By

Published : Jul 23, 2021, 3:18 PM IST

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபுவைச் சந்தித்துப் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில் "எனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் கொடுத்த பிறகும் எந்தப் பயனுமில்லை. எனது பக்கத்தைத் தவறாக யாரும் பயன்படுத்திவிடக் கூடாது. எனது ட்விட்டர் பக்கத்தை முடக்கியவர்கள் யார் என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் மனு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமிற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை குஷ்பு பயன்படுத்திவந்த ட்விட்டர் பக்கத்தை மீண்டும் அவருக்கே கொடுக்கவும், அவருடைய ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார் என்பது தொடர்பான விவரங்களைத் தரும்படியும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க:நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை?

ABOUT THE AUTHOR

...view details