தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாடு பொதுப் பணி துறை கணினியில் சைபர் அட்டாக்' - ஹேக்கர்கள் மிரட்டல்! - சென்னை அண்மைச் செய்திகள்

தமிழ்நாடு பொதுப் பணி துறை கணினியில் சைபர் அட்டாக் நடத்திய ஹேக்கர்கள், முக்கிய ஆவணங்களை முடக்கி கிரிப்டோகரன்சி கேட்டு மிரட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேக்கர்கள்
ஹேக்கர்கள்

By

Published : Sep 18, 2021, 9:46 PM IST

சென்னை: தமிழ்நாடு பொதுப் பணி துறையின் கணினியில் சைபர் அட்டாக் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் முக்கிய பிரமுகர்கள் வருகை, அரசு திட்டங்கள் உள்ளிட்டவை சார்ந்த சில முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மீண்டும் என்க்ரிப்டட் குறியீட்டை ஒப்படைப்பதற்காக, 1,950 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை செலுத்தவும் ஹேக்கர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

என்க்ரிப்ட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் நிபுணர்கள்

இதனையடுத்து ஒன்றிய, மாநில அரசுகளின் கணினி மேம்பாட்டு குழுக்கள், இணைய பாதுகாப்பு நிபுணர்கள் ஆகியோர் என்க்ரிப்ட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனால் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தமிழ்நாடு பொதுப் பணித் துறையில் நடைபெற்ற சைபர் அட்டாக் குறித்து விரைவில் முறையான புகார் அளிக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:புதுமாப்பிள்ளை கார் மோதி உயிரிழப்பு - சிசிடிவி வைரல்!

ABOUT THE AUTHOR

...view details