தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர கட் ஆப் மதிப்பெண் உயர்வு - கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்பில் இந்தாண்டு தமிழ்நாட்டில் கட்ஆப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது எனக் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.

jeyaprakash gandhi
jeyaprakash gandhi

By

Published : Nov 16, 2020, 7:46 PM IST

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

இதுதொடர்பாக கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், "மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட்ஆப் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்தாண்டு நீட் தேர்வில் 650 மதிப்பெண்களுக்கு மேல் 172 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு 14 மாணவர்கள் இருந்தனர். இந்த முறை 600 மதிப்பெண்களுக்கு மேல் 992 மாணவர்கள் உள்ளனர். கடந்தாண்டு 143 மாணவர்கள் மட்டுமே இடம் பிடித்த நிலையில், நடப்பாண்டில் 550 மதிப்பெண்களுக்கு மேல் இரண்டாயிரத்து 263 மாணவர்கள் உள்ளனர்.

கடந்தாண்டு 521 ஆக இருந்த எண்ணிக்கை, இந்த 500 மதிப்பெண்களுக்கு மேல் ஐந்தாயிரத்து 122 மாணவர்கள் உள்ளனர். கடந்தாண்டு ஆயிரத்து 386 மாணவர்கள் மட்டுமே மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்தாண்டு கட்ஆப் மதிப்பெண்கள் 75 முதல் 80 மதிப்பெண்கள் வரை உயர வாய்ப்புள்ளது. பொதுப்பிரிவினருக்கு 598 முதல் 604 மதிப்பெண் வரை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 557 முதல் 561 மதிப்பெண்கள் வரையும், பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாம் பிரிவினருக்கு 546 முதல் 550 மதிப்பெண்கள் வரை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 524 முதல் 528 மதிப்பெண்கள் வரையிலும், பட்டியலின பிரிவினருக்கு 441 முதல் 445 வரையிலும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அமைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 600 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவர்கள் உள்ளனர். பொது தரவரிசைப் பட்டியலில் 5ஆயிரத்து 182 மாணவர்கள் உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 14 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

பிற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை காட்டிலும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 250 முதல் 300 மதிப்பெண்கள் வரையில் குறைவாக பெற்றவர்களுக்கும் இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் 200க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தாலும், அதில் பட்டியலின மாணவர்கள் 150 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அரசு மருத்துவக் கல்லூரியில் கிடைக்க வாய்ப்புள்ளது.

மருத்துவப்படிப்பில் கட்ஆப் மதிப்பெண் உயர வாய்ப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், பிற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே அதிகளவில் மதிப்பெண் வேறுபாடுகள் இருந்தாலும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் முன்னேற ஒதுக்கீடு வழங்கியதை வரவேற்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணையை நாளை தொடங்கவுள்ள நீதிபதி கலையரசன்!

ABOUT THE AUTHOR

...view details