சென்னை: நட்பாண்டில் 190க்கும் மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களின் கட் ஆப் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதிகரிக்கவும், 185லிருந்து அதற்கு குறைவான கட் ஆப் பெற்ற மாணவர்களின் கட் ஆப் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைய வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்
2022-23 ம் ஆண்டிற்கான இளங்கலை பிஇ, பிடெக் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அதில் பொதுப் பிரிவில் 1,56,278 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 133 பேர் 200க்கு 200 கட் - ஆப் பெற்றுள்ளனர். 468 பேர் 199 முதல் 200 வரையும், 3,023 பேர் 195 முதல் 199 வரையும் கட் - ஆப் பெற்றுள்ளனர். தொழிற்கல்விப் பிரிவில் ஒரு மாணவர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் 120 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.அதே போல் 190க்கும் அதிகமாக கட் ஆப் பெற்றவர்களின் மதிப்பெண் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் எண்ணிக்கை குறைந்துள்ளது
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறும்போது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை காட்டிலும் 120 மாணவர்கள் அதிகமாக பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 198 கட் ஆப் மதிப்பெண்ணிற்கு கிடைத்த இடங்கள் 200க்கு 200 பெற்ற மாணவர்கள் 2 மதிப்பெண் அதிகரிக்கிறது. 197க்கு கடந்த ஆண்டு கிடைத்த கல்லூரியில் 199 மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 195 .95 மதிப்பெண்ணுக்கு கிடைத்த இடம் 197 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கிடைக்கும். அதே சமயம் 190 மதிப்பெண்களுக்கு மேலாக கட்-ஆப் மதிப்பெண் அதிகரித்து இருக்கிறது . 196 முதல் 185 க்கு கீழ் கட்-ஆப் மதிப்பெண் குறைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.