தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.23 லட்சம் சவுதி ரியால் கரன்சி பறிமுதல் - Man arrested for smuggling Saudi Riyal currency

சென்னையிலிருந்து சாா்ஜாவிற்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.34.23 லட்சம் மதிப்புடைய சவுதி ரியால் கரன்சியை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமானநிலையத்தில் ரூ.34.23 லட்சம் சவுதி ரியால் கரண்சி கடத்தல்-சுங்கத்துறை பறிமுதல் செய்தனர்..!
சென்னை விமானநிலையத்தில் ரூ.34.23 லட்சம் சவுதி ரியால் கரண்சி கடத்தல்-சுங்கத்துறை பறிமுதல் செய்தனர்..!

By

Published : Jul 4, 2022, 3:45 PM IST

சென்னை: சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லும் கல்ப் ஏா்வேஸ் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதித்து அனுப்பினர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சுங்க அதிகாரிகள், உடமைகளை சோதனையிட்டனர். அவருடைய சூட்கேஸ்க்குள் ஏராளமான காகித கவர்கள் இருந்தன. அந்த கவா்களை சந்தேகத்தில் பிரித்து பாா்த்தனா். ஒவ்வொரு கவா்க்குள்ளும் ரூ.500 சவுதி ரியால் கரண்சி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 339 கவா்களில் ரூ.339 சவுதி ரியால் கரண்சிகள் இருந்தது தெரியவந்தது.

அந்த சவுதி ரியால் கரண்சிகளின் மொத்த மதிப்பு ரூ.34.23 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள், சவுதி ரியால் கரண்சிகளை பறிமுதல் செய்தனா். அதோடு பயணியின், சாா்ஜா விமான பயணத்தையும் ரத்து செய்தனா். மேலும் பயணியை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் ரூ.98.55 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details