சென்னை துறைமுகத்திலுள்ள சுங்க சரகத்தில் இருந்து கடல் வழியாக துபாய்க்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் கண்டெய்னர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது துபாய் அனுப்புவதற்காக வைத்திருந்த கண்டெய்னர்களில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தில் வைத்து செம்மரக்கட்டைகளை கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.