தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் தங்கம் மற்றும் வெளிநாட்டுப்பணம் பறிமுதல் - 9 பேர் கைது - தங்கம் கடத்தியவர்கள் கைது

சென்னை விமான நிலையத்தில் இன்று (மே 23) ஒரே நாளில் 1 கோடியே 24 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டுப் பணம் ஆகியவற்றை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

By

Published : May 23, 2022, 10:13 PM IST

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் துபாயில் இருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர்.

அப்போது கேரளா மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த நிசார் மண்டலா (27) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதால், அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் துணிகளுக்கு நடுவே பர்ஸ், காலில் அணிந்திருந்த ஷு ஆகியவற்றைப் பரிசோதித்தில் அதில் தங்கம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து இவரிடமிருந்து 64 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 402 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினர்.

அதேபோல் கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து வந்த ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது உள்ளாடை, உடமைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

தொடர்ந்து ஆறு பேரிடம் இருந்து 69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள். ஒரே நாளில் சுங்கத்துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் ஒரு கோடியே 24 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 902 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து கேரள இளைஞர் உள்பட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதேபோல் ராமநாதபுரத்தைச்சேர்ந்த ஸ்ரீ கலந்தர், தமிமுல் அன்சாரி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ முகமது நாகூர் மொஹைதீன் ஆகிய இரு பயணிகள் துபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது சுங்கத்துறை அலுவலர்கள் இருவரையும் நிறுத்தி சோதனை செய்தபோது, அவர்களது உடமைகளில் பல்வேறு வெளிநாட்டு கரன்சிகளை கட்டுக்கட்டாக வைத்திருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணம்

இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 10.70 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 9 பேரிடமும் தங்கம் கடத்தல், வெளிநாட்டுப் பணம் கடத்தல் ஆகியவற்றின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:என்னா அடி... பெண்ணிடம் செயின் பறித்த வடஇந்திய இளைஞரை வெளுத்துவாங்கிய மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details