சென்னை விமான நிலையம்:துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் பயணி ஒருவர் உடமைகளுக்குள் மறைத்து 30 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க பசையை கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அதே பயணியிடம் இருந்து 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் 35 பார்சல்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதேபோல் சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த ஒருவரை சந்தேகித்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியாக அழைத்து சோதனையில் ஈடுபட்டனர்.