தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானம் மூலம் 300 கிராம் கஞ்சா கடத்தல்: சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை

சென்னை: கனடாவிலிருந்து சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 300 கிராம் உயர் ரக கஞ்சாவை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

விமான மூலம் 300 கிராம் கஞ்சா கடத்தல்
விமான மூலம் 300 கிராம் கஞ்சா கடத்தல்

By

Published : Feb 24, 2021, 8:18 AM IST

சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு (பிப். 22) கனடாவிலிருந்து சரக்கு விமானம் வந்தது. அதில் வந்த சரக்கு பார்சல்களை சுங்கத் துறை அலுவலர்கள் ஆய்வுசெய்தனர்.

அப்போது, கனடாவின் டோரோண்டோ நகரிலிருந்து சென்னையிலுள்ள ஒரு முகவரிக்கு மூன்று கொரியா் பார்சல்கள் வந்திருந்தன. அந்தப் பார்சல்களுக்குள் ஆயுர்வேத மூலிகை, பவுடர் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், சந்தேகமடைந்த சுங்கத் துறை அலுவலர்கள், பார்சல்களிலுள்ள தொலைபேசி எண்ணை தொடா்புகொண்டனர். அது தவறான எண் என்பது தெரியவந்தது. அதேபோல அதில் குறிப்பிட்டிருந்த முகவரியும் தவறானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மூன்று பார்சல்களையும் அலுவலர்கள் பிரித்து ஆய்வுசெய்தனர். அப்போது, அதில் உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், மூன்று பார்சல்களிலும் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 300 கிராம் கஞ்சாவை பறிமுதல்செய்த சுங்கத் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: போலீஸுக்கே லந்து கொடுத்த போதை ஆசாமி !

ABOUT THE AUTHOR

...view details