இங்கிலாந்திலிருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில்வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அதில், ஒரு பாா்சல் இங்கிலாந்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூரில் உள்ள ஒரு முகவரிக்கு வந்திருந்தது. மருந்துப் பொருள்கள் இருப்பதாக அந்தக் கொரியரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கரோனா அவசர காலத்தில் மருந்துப் பொருள்களை காலதாமதம் செய்யாமல் டெலிவரி கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனாலும் அலுவலர்களுக்கு அந்தப் பாா்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து சுங்கத்துறையினா் பாா்சலை சோதனையிட்டனர். அதில், நீலக் கலரில் 270 மாத்திரைகள் இருந்தன. அதனை ஆய்வு செய்தபோது, வெளிநாடுகளில் பயன்படுத்தும் விலை உயா்ந்த ’மெத்தாம் பெட்டாமின்’ என்ற ஒருவகை போதை மாத்திரைகள் என்பது தெரியவந்தது. அதன் சா்வதேச மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.