தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கெட்டுப்போன ஸ்வீட்: வாடிக்கையாளர் புகார் - chennai district news

அம்பத்தூர் ராம் நகரில் உள்ள பிரபல கிருஷ்ணா இனிப்பு கடையில் கெட்டுப்போன ஸ்வீட் விற்பனை செய்யப்பட்டதாக வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார்.

கெட்டுப்போன ஸ்வீட் விற்பனை
கெட்டுப்போன ஸ்வீட் விற்பனை

By

Published : Jan 3, 2023, 9:22 AM IST

Updated : Jan 3, 2023, 11:35 AM IST

சென்னை: ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் ஹரிஷ் பாலாஜி. இவரின் தந்தை வெளியூரிலிருந்து சென்னை வந்தார். உறவினரை காண அம்பத்தூர் ராம் நகரில் உள்ள பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பு கடையில் 8 வகை இனிப்பு தொகுப்பு பொருட்கள் 1,700 ரூபாய்க்கு வாங்கினார்.

அதை அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பிறகு தான் வாங்கிய அனைத்து இனிப்பு மற்றும் பிஸ்கட் உணவு வகைகள் கெட்டுப் போய் இருந்தது அவருக்கு தெரியவந்தது.

உடனடியாக இனிப்பு பொருட்களை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடைக்கு சென்று முறையிட்டார். கடை ஊழியர்கள் தவறுதலாக விற்பனை செய்து விட்டதாக தெரிவித்தனர்.

ராஜசேகர் உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்த நிலையில், அருகில் உள்ள அம்பத்தூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: கருப்பன் யானையை துரத்த வந்த கும்கி

Last Updated : Jan 3, 2023, 11:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details