தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் - Curfew extended for another week in Tamil Nadu: Chief Minister

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர்
தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர்

By

Published : Jun 5, 2021, 10:17 AM IST

Updated : Jun 5, 2021, 1:18 PM IST

10:14 June 05

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு வரும் 7-06-2021 முதல் 14-06-2021 காலை 6 மணி வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்றுப் பரவல்  அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே, இம்மாவட்டங்களில், நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும் அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 7-6-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. 

  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
  • அனைத்து அரசு அலுவலகங்களும், 30 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சார்பதிவாளர் அலுவலகங்கள்  ஒரு நாளைக்கு 50 விழுக்காடு டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர, இதர மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே, அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.  

  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன்விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தனியார் சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
  • தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் அனுமதிக்கப்படும்.
  • மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
  • வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், புத்தகங்கள் விற்கும் ஸ்டேசனரி கடைகள், ஹார்டுவேர் கடைகள், இருசக்கரவாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், மின்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து அரசு அலுவலகங்களும், 30 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சார்பதிவாளர் அலுவலகங்கள்  ஒரு நாளைக்கு 50 விழுக்காடு டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்
  • வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.
  • மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகளும் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • ஜுன் 14ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்
  • டாஸ்மாக், சலூன், தேநீர் கடைகளை திறக்க அனுமதியில்லை

பொதுவான கட்டுப்பாடுகள்:

  • நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.
  • கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும், 10 விழுக்காடு பணியாளர்களுடன் நிலையான  வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Last Updated : Jun 5, 2021, 1:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details