தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு! - Chennnai curfew vehicles ceased delivered

சென்னை: ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட 29 ஆயிரத்து 455 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சென்னை இருசக்கர வாகனம் பறிமுதல்  இருசக்கர வாகனம் பறிமுதல்  பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் ஒப்படைப்பு  curfew vehicles ceased delivered  Chennnai curfew vehicles ceased delivered  vehicles ceased
curfew vehicles ceased delivered

By

Published : Apr 19, 2020, 5:20 PM IST

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு முழுவதும் தடை உத்தரவை மீறி, சிலர் வாகனங்கள் மூலம் சாலைகளில் சுற்றி திரிந்தனர்.

இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த 25 நாள்களில் தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்த 2 லட்சத்து 28 ஆயிரத்து 823 பேர் கைது செய்யப்பட்டு, 1 லட்சத்து 94 ஆயிரத்து 339 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர்.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு முடிந்த பின்பே வழங்கப்படும் எனக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், வாகனத்தை பறிகொடுத்தவர்கள் அத்தியாவசியத் தேவைக்கு வெளியே செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் நாள்தோறும் காவல் நிலையத்தை அணுகியதாகக் கூறி, வாகனத்தைத் திருப்பி கொடுக்கும்படி கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற காவல் துறையினர் மீண்டும் விதிமீறலில் ஈடுபடமாட்டேன் என்று உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, காலை 7 மணி முதல் 12:30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு சமூக இடைவெளியுடன் வாகனங்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் காவல் துறையினர்

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட 28 ஆயிரத்து 285 இருசக்கர வாகனங்கள்,134 மூன்று சக்கர வாகனங்கள், 1036 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 29 ஆயிரத்து 455 வாகனங்கள் உரியவர்களிடம் முதற்கட்டமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் தொடர்ந்து ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா பரவலால் தள்ளாடும் வேளாண் துறை - உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details