தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு மீறல்: ரூ.14 கோடிக்கு மேல் அபராதம் வசூல் - Tamil Nadu Police

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து காவல் துறையினர், அபராதமாக இதுவரையிலும் 14 கோடியே 10 லட்சத்து இரண்டு ஆயிரத்து 210 ரூபாய் வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

அபராதம் வசூல்
அபராதம் வசூல்

By

Published : Jun 21, 2020, 12:59 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், காவல் துறையினர் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தும் வாகனங்களைப் பறிமுதல் செய்தும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்து இதுவரையிலும் தமிழ்நாடு தடையை மீறியதாக ஆறு லட்சத்து 81 ஆயிரத்து 952 பேரைக் காவல் துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர். மேலும், நான்கு லட்சத்து 98 ஆயிரத்து 193 வாகனங்களைப் பறிமுதல் செய்ததோடு, 14 கோடியே 10 லட்சத்து இரண்டு ஆயிரத்து 210 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருவள்ளூர்

ABOUT THE AUTHOR

...view details