தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

By

Published : Dec 31, 2020, 4:15 PM IST

Updated : Dec 31, 2020, 9:24 PM IST

16:10 December 31

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும்; காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக்
கருத்தில் கொண்டும்,கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும் வருகிற ஜனவரி 31 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.1.2021 நள்ளிரவு
12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

  • தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்டப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 
     நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 விழுக்காடு இருக்கைகள் (50% capacity) அல்லது
    அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார, கல்வி மற்றும் மதம் சார்ந்த
    கூட்டங்கள் நடத்த 1.1.2021 முதல் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும்,
    சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.
     
  •  திரைப்படம் மற்றும் சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான உள்அரங்கு மற்றும் திறந்தவெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு, வெளியிடப்பட்ட உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணிசெய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பின்றி பணி செய்ய
    அனுமதி அளிக்கப்படுகிறது.
     
  • நேரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு
    நடைமுறைகளை பின்பற்றியும், பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

    ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
     
  •  புதிய உருமாறிய நோய்க் கிருமி பரவாமல் தடுக்க, வெளிமாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம்
    மாநிலங்களைத் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்குத் தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு (E-registration) முறை தொடரும்.
     
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை
    மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.
     
  •  தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான
    தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். மேலும், காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான
    பொதுமக்கள் கூட்டம் கூடுவதால், கரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து
    கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் (16.1.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
     
  • தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட
    வேண்டும். குறிப்பாக, நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். பல்வேறு தளர்வுகளுக்குத் தனித்தனியே நிலையான வழிகாட்டுநெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன. 
  • இந்தநிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
    பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும்
    இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைபிடித்தும், அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்' என்று தெரிவிக்கபட்டுள்ளது.
  • இதையும் படிங்க:தொழிற்சாலைகளில் பரிந்துரைக்கப்படும் மிக முக்கியமான தீ பாதுகாப்பு விதிகள் என்னென்ன?


 

Last Updated : Dec 31, 2020, 9:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details