தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு நாளன்று போட்டித்தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி - ஊரடங்கு நாளன்று போட்டித்தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி

தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே திட்டமிட்டப்படி நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்ளுக்கு அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

Tamilnadu weekend lockdown
ஊரடங்கு நாளன்று போட்டித்தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி

By

Published : Jan 6, 2022, 12:22 PM IST

சென்னை: கரோனா பரவலை தடுப்பதற்காக தமிழ்நாட்டில் வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரும் நாள்களில் ஞாயிற்றுக்கிழமையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( யு.பி.எஸ்.ஸி / டி.என்.பி.எஸ்.ஸி ) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகளுக்கு செல்வோர்க்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோருக்கும் அனுமதி

நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கச் செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் ஆகியவற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுபோன்ற முழு ஊரடங்கு நாள்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி செல்லும்போது முழு ஒத்துழைப்பு அவர்களுக்கு அளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நாளை முதல் சிவில் சர்வீஸ் முதன்மைத்தேர்வுகள் தொடக்கம்..

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details