ஜி.கே. மூப்பனாரின் 21வது நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "ஜி.கே.மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்தியதற்காக பெருமை கொள்கிறேன். ஒரு குடும்ப உறுப்பினராக இங்கே வந்துள்ளேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா இயக்கங்களுடன் நட்புறவுடன் இருந்ததற்கு உதாரணம் மூப்பனார். ஆனால் அத்தகைய கலாச்சாரம் இப்போது இல்லை என வருத்தம் தெரிவித்தார்.