தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்.கே.நகரில் ராட்சத தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி - ஆர்.கே.நகரில் தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

ஆர்.கே. நகரில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ராட்சத தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி
தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

By

Published : Jan 25, 2022, 3:47 PM IST

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

அப்போது சமையல் கலை தொழிலாளர்கள் 15 அடியில் ராட்சத தடுப்பூசியை தூக்கிச் சென்றனர்.

தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

ஆர்.கே.நகர் பகுதியில் பேரணி தொடங்கி வைத்தியநாதன் மேம்பாலம் அருகே முடிவடைந்தது. அங்கு ராட்சத ஊசி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் மூலிகை கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ராட்சத தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

சமையல் தொழிலாளர்கள் பாதிப்பு

இது குறித்து தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் இனியவன், "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறு தானியங்களை வைத்து உணவு செய்வது குறித்து ஏற்கனவே விழிப்புணர்வு செய்திருந்தோம்.

சுமார் 25 லட்சம் சமையல் சார்ந்த தொழிலாளர்கள் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். எனவே கரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:வலிமை அப்டேட்: ரிலீஸுக்கு இரண்டு தேதிகள் ரிசர்வ்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details