சென்னை கிழக்கு தாம்பரம் புத்தர் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (47). இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று இரவு (ஆக.19) வேலைக்குச் சென்றுவிட்டு, நிறுவனத்தின் வாகனத்தில் கிழக்கு தாம்பரம் வந்து இறங்கியுள்ளார். பின் வீட்டுக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது தாம்பரத்தில் இருந்து சேலையூர் செல்லக்கூடிய சாலையில் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ராஜசேகரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.