வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறையில் உள்ளார். இவர் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை ஆவார் என்றும், அதிமுகவுக்கு தலைமை ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அதிமுக அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் சித்ரகுப்தன் என்ற பெயரில் கவிதை தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,''சத்தியத்து கோட்டையும், சாத்தான்கள் நோட்டமும்" என்ற தலைப்பில், ''
- உள்ளே இருப்பவர் வெளியே வருவராம் ஒன்றரைகோடி தொண்டர்கள் இயக்கத்தை உடனேயே தனதாக்கி கொள்வராம்..
- ஆமைகள் புகுந்திட அண்ணா தி.மு.க ஊமைகள் கூடம் ஆகுமாம்....
- முட்டோ போண்டா முதல்வராக முடிசூடிக் கொள்வராம் மொத்தத்தில்
- மக்கள் திலகமும் மகராசி அம்மாவும் மடிவளர்த்த கழகம் மாஃபியா உலகம் ஆகுமாம்
- இப்படியோர் புரளியை திட்டமிட்டு ஒரு கும்பல் தினம் கிளப்பி விடுகிறது கழகத்து தொண்டரை கலக்கமுற வைக்கிறது கண்சிவக்கச் செய்கிறது கூடவே....
- தன் தவறு உணர்ந்து தாய்வீடு திரும்புவோரை தடுத்து நிறுத்த பெய்டு நியூஸ் பரப்பி விட்டு பித்தலாட்டம் செய்கிறது
- அட கூறுகெட்ட குக்கர்களே அப்பழிக்கில்லா அம்மாவின் அரசியல் புனிதத்தில் விஷயமாகி கலந்து அண்ணா தி.மு.க என்னும் மாசற்ற இயக்கத்தை கைவைத்தும் மண்ணுளி பாம்புகளாய் மறைந்திருந்து கொண்டு கழகத்தை கரையானாய் அரித்து கறைபடிய வைத்ததும் தாய்தந்த பதவியை எல்லாம் தாங்கள் தந்தது என பின்னிருந்து கொண்டு பில் போட்டு பிழைத்ததும்....
- முடிசூடிய உடனேயே முதலிலிட்ட கையெழுத்து மது ஒழிப்பு என்றிருக்க அந்த மகராசி இல்லத்தில் இருந்து கொண்டே கோல்டன் மிடாஸ் என்னும் குடிகெடுக்கும் சாராய அலையை நடத்தி கும்பாளம் போட்டதும்....
- பொன்மனத்து தலைவன் புகழ்மணக்க தொடங்கி இல்லாரை காத்திடவே இமையாய் போற்றிய ஏழைகளின் சொர்க்கமாம் ஈரிலை கழகத்திற்கு இழுக்கும் அழுக்கும் சேர்த்திட நச்சுக் கிருமிகள் இனி ஒருநாளும் கோடி தொண்டர்கள் வணங்குகின்ற ஆலயத்தில் குடிபுகவும் முடியாது.....
- சுத்திகரித்த கங்கையாக சூதகமில்லா மங்கையாக தொண்டர்கள் கூடி நடத்துகிற தூயநதிச் சொரூபமாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைகாத்தல் இரண்டாயிரத்து இருபத்தி ஒன்று நோக்கி பீடுநடை போடுகிற சத்தியத்தின் கோட்டைக்குள் அந்த சாத்தன் ஒருநாளும் சரசமாட முடியாது சத்தியம் இது சத்தியம்....