தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெங்களூரு விமான நிலைய சம்பவம்: விஜய்சேதுபதிக்கு அழைப்பாணை - நடிகர் விஜய்சேதுபதிக்கு நீதிமன்றம் சம்மன்

பெங்களூரு விமான நிலைய சம்பவம் தொடர்பான அவதூறு வழக்கில் நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்ப சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

vijay sethupathi
vijay sethupathi

By

Published : Dec 14, 2021, 6:46 PM IST

சென்னை:திரைத் துறையில் நடிகராக இருந்துவரும் மகா காந்தி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "மருத்துவப் பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் வந்தபோது விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். திரைத் துறையில் அவரின் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தேன்.

ஆனால் எனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவுப்படுத்திப் பேசியதுடன், என்னையும் எனது சாதியையும் பற்றி தவறாகப் பேசினார். விமான நிலையத்திலிருந்து வெளியேறிய என் மீது, விஜய்சேதுபது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாகத் தாக்கினார்; காதில் அறைந்தார்.

இதனால் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உண்மைச் சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்பப்பட்டது.

நேரில் ஆஜராக உத்தரவு

எனவே, திரைத் துறையில் இருக்கின்ற சக நடிகரைப் பாராட்ட சென்ற என்னைத் தாக்கி, அதை உண்மைக்குப் புறம்பாகச் செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

சென்னை சைதாப்பேட்டை ஒன்பதாவது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (டிசம்பர் 14) விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4ஆம் தேதி நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: உரத் தட்டுப்பாடு: புகார் செய்ய வாட்ஸ்அப் எண்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details