தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

NZ VS BAN: நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை.. காத்து வாங்கும் சேப்பாக்கம் மைதான இருக்கைகள்!

Cricket World Cup 2023: ஐசிசி உலக கோப்பை தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடு வருகின்றன. ரசிகர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 4:01 PM IST

Updated : Oct 13, 2023, 5:47 PM IST

சென்னை சேப்பாக்கம்

சென்னை: ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 11வது லீக் போட்டியில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணி ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் அதைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் செயல்ப்பட்டு வருகிறது. மறுபுறம் வங்கதேசமானது, இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் நியூஸிலாந்து அணியை வென்றது இல்லை. அதனால், அந்த அணி தன் முதல் வெற்றிக்காக, போராடி வருகிறது.

ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட்-2023 தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரானது, நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரானது இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய 10 நகரில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து என 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து 2வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக, இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

மேலும், காயத்தின் காரணத்தினால், முதல் இரு ஆட்டங்களில் விளையாடாத நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முழு உடற்குதியை அடைந்துள்ளதை தொடர்ந்து இன்றைய ஆட்டத்தில் களமிறங்க உள்ளார். இந்த போட்டியை காண்பதற்கு இந்தியாவில் இருந்தும், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் வந்துள்ளனர்.

இது குறித்து, ஆற்காடுயை சேர்ந்த கேன் வில்லியம்சனின் ரசிகர் பிரதீப் கூறுகையில், "காயத்தின் காரணத்தினால், நியூஸிலாந்து அணியின் முதல் இரு போட்டிகளில் அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் விளையாட்டை காண முடியவில்லை. அவர் எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தக் கூடியவர். அவர் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடிபார் என எதிர்ப்பார்க்கிறேன். மேலும், நிச்சியமாக இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி வென்று, உலக கோப்பையில் தனது ஹர்டிக் வெற்றியை பதிவு செய்யும் என கூறினார்.

தொடர்ந்ந்து நியூஸிலாந்தில் இருந்து சென்னைக்கு வந்த ரசிகர் ஜாஸ் இது குறித்து கூறுகையில், "நான் நியூஸிலாந்தில் இருந்து, இந்த போட்டியை காண்பதற்காக சென்னை வந்துள்ளேன். நியூஸிலாந்து அணி இந்த உலக கோப்பையில் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. மேலும், கேன் வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் விளையாடுவதால், ஆட்டம் நியூஸ்லாந்து அணிக்கே சாதகமாக அமையும் என தெரிவித்தார். இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைவதால் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான மிட்செல் சாண்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள்.

மேலும், இது குறித்து டாக்காவில் இருந்து சென்னை வந்த வங்கதேச கிரிக்கெட் ரசிகர் கூறுகையில், "வங்கதேசம், சிறப்பாக செயல்ப்பட்டு, இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும். மேலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளில் வென்றது இல்லை என்றாலும், இம்முறை கண்டிபாக வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். சாகிப் அல் ஹாசன், மேய்தி ஹாசன் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுவார்கள் என தெரிவித்தார்.

வெறிச்சோடிய மைதனாம்: கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதியது. இந்த, முதல் போட்டியின் போதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போதும் சென்னை மைதானம் ரசிகர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி தான் காணப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு:சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நியூஸிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுவதால், தமிழக காவல் துறை சார்பில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீஸார்கள் மைதானத்தை சுற்றியும் மைதனாத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Neeraj Chopra : 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த தடகள வீரர்! நீரஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரை!

Last Updated : Oct 13, 2023, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details