தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்த உதவி ஆணையரின் உடல் 36 குண்டுகள் முழங்க தகனம் - tamil nadu

கரோனா தொற்றால் உயிரிழந்த சென்னை காவல் உதவி ஆணையர் ஈஸ்வரனின் உடலுக்கு 36 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

கரோனாவால் உயிரிழந்த உதவி ஆணையரின் உடல் தகனம்
கரோனாவால் உயிரிழந்த உதவி ஆணையரின் உடல் தகனம்

By

Published : May 14, 2021, 10:11 PM IST

கரோனா தொற்றின் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் காவல் துறையைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் பல்லாவரம் காவல் உதவி ஆணையராக பணிபுரிந்த ஈஸ்வரன் நேற்று (மே13), கரோனா தொற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் இன்று கொளத்தூர் நேர்மை நகர் மயானத்தில் உதவி ஆய்வாளர் பழனிசாமி மேற்பார்வையில் 36 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கரோனாவால் உயிரிழந்த உதவி ஆணையரின் உடல் 36 குண்டுகள் முழங்க தகனம்

இறுதிச் சடங்கில், அவருடன் பணிபுரிந்த காவலர்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: 45 வருடங்கள்... இளையராஜாவுக்கு 3 தலைமுறை பலம் உண்டு

ABOUT THE AUTHOR

...view details