தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் - மின்சார ரயில் சேவை 30 நிமிடங்கள் பாதிப்பு! - Cracks on the sides of the railway tracks

சென்னை: இரயில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் ஏற்பட்ட விரிசலால் சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் சேவை 30 நிமிடங்கள் பாதிப்புக்குள்ளானது.

Cracks on the sides of the railway tracks
Cracks on the sides of the railway tracks

By

Published : Dec 20, 2019, 2:07 PM IST

சென்னையில் இன்று அதிகாலை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சிறிதளவு விரிசல் உள்ளதாக பொது மக்கள் ரயில்வே அலுவலர்களிடம் புகார் அளித்தனர். அதனைக் கண்டறிந்து ரயில்வே அலுவலர்கள் உடனே தற்காலிகமாக அதனை சீர் செய்தனர்.

இதனால் சுமார் அரை மணி நேரம் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், அலுவலகம் செல்லக்கூடியவர்கள், பொது மக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

மின்சார ரயில் சேவை 30 நிமிடங்கள் பாதிப்பு

நிலைமை சீர் செய்யப்பட்டதும் சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை ரயில் சேவை மீண்டும் சீரானது.

இதையும் படிங்க:

பெண் பயணியை தாக்கிய ஊபர் ஆட்டோ ஓட்டுநர் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details