தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில் சென்னை தீவுத்திடலில் இன்று (நவம்பர் 8) முதல் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது.

crackers-sales-started-in-theevuthidal-for-diwali
crackers-sales-started-in-theevuthidal-for-diwali

By

Published : Nov 8, 2020, 10:43 PM IST

ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் அமைப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீவுத்திடலில் 40 கடைகள் அமைக்கப்பட்டு பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு தீவுத்திடலில் மொத்தம் 60 பட்டாசு கடைகள் விற்பனைக்காக அமைக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு கரோனா அச்சம் காரணமாக 20 குறைத்து 40 கடைகளுக்கு மட்டுமே விற்பனைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் சேக் அப்துல்லா கூறுகையில், ''கடந்த 6 மாதங்களாக ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பொதுமக்கள் தீவுத்திடலில் பொருட்காட்சி போன்று எண்ணி மகிழ்ச்சியுடன் பட்டாசுகளை வாங்க வருவார்கள். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுரைகள் வழங்கப்படுவதுடன் முகக்கவசம் வழங்கப்பட்டும், கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறோம்.

பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் சேக் அப்துல்லா

இந்த ஆண்டு பட்டாசு வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மற்ற மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதால் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் பட்டாசு வெடிப்பதற்கான தடை இல்லாததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பட்டாசுகளை வாங்கி வருகிறார்கள். தீவுத்திடலில் பட்டாசுகளின் விலை மலிவாக கிடைக்கும்" என்றார்.

இதையும் படிங்க:பள்ளி மைதானத்தில் விளையாட தடை - போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details