தீபாவளிப் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் படி தமிழ்நாட்டில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. காலை 6 முதல் 7 மணி, இரவு 7 முதல் 8 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் தீபாவளிப் பண்டிகையையொட்டி சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகளின் அளவீடு பற்றி மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி அதில், 'கடந்த 26, 27 ஆகிய நாட்களில் 22.58 பட்டாசுக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, இந்தக் குப்பைகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள, தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை கூட்டமைப்பு நிறுவனத்தின் அபாயகரமான கழிவுகள் மையத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 585 பேர் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசுக் கழிவுகளை அகற்றும் துப்புரவு பணியாளர்கள் 15 மண்டலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகளின் அளவீடு பட்டியல்:
மண்டலம் | 26/10/2019 | 27/10/2019 |
1. | Nil. | 1.200 |
2. | 0.115. | 1.552 |
3. | Nil. | 1.150 |
4. | Nil. | 0.685 |
5. | Nil. | 4.800 |
6. | Nil. | 0.820 |
7. | 0.060. | 1.352 |
8. | Nil. | 0.825 |
9. | 0.066. | 2.198 |
10. | 0.063 | 0.378 |
11. | 0.055. | 2.005 |
12. | 0.049. | 0.185 |
13. | Nil. | 3.223 |
14. | 0.145. | 0.850 |
15. | 0.095. | 0.714 |
Total | 0.648. | 21.937 |