தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவின் கிளை அமைப்பு அதிமுக - கே.பாலகிருஷ்ணன் - BJP

சென்னை: பாஜகவின் கிளை அமைப்பு போல் அதிமுக உருவாகி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

பாஜகவின் கிளை அமைப்பு அதிமுக -கே.பாலகிருஷ்ணன்

By

Published : Jul 26, 2019, 6:16 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் குறித்து விவாதிக்க ஸ்டாலினை சந்தித்தேன். வேலூரில் நிச்சயமாக திமுக வெற்றி பெறும். அதிமுகவை பொறுத்தவரை பணம் பலம் கொண்டு எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.

பாஜகவின் கிளை அமைப்பு அதிமுக -கே.பாலகிருஷ்ணன்

மேலும் பேசிய அவர், அதிமுக உண்மையான அதிமுக போல் இல்லை. பாஜகவின் கிளை அமைப்பு போல் மாறி வருகிறது என விமர்சித்தார்.

ABOUT THE AUTHOR

...view details