தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல், டீசல் வரிகளை குறைக்க பிரகாஷ் காரத் வலியுறுத்தல்! - பிரகாஷ் காரத்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் காரத்
செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் காரத்

By

Published : Feb 25, 2021, 7:22 PM IST

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் டெல்லியிலிருந்து விமானம் முலம் சென்னை வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் காரத் கூறுகையில், “தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது.

இதற்கான தேர்தல் ஆணைய அறிவிப்பு வரவுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் பரப்புரையை முன் கூட்டியே தொடங்கவுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சி உள்ளது. திமுக கூட்டணி அதிமுக, பாஜக கூட்டணியை தோல்வி பெற வைக்கும்.

தேர்தல் பரப்புரையில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேசவுள்ளோம். இந்தியா முழுவதும் மக்கள் சமையல் எரிவாயு விலை உயர்வு, டெல்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்க உள்ளது.

ஒரு சில நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கையால் தான் பெட்ரோலிய பொருள்கள் விலை உயர்ந்துள்ளன. பெட்ரோலிய விலையில் 63 சதவீதம் கலால் மற்றும் வரிகள் தான். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த பிரகாஷ் காரத்

ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. கலால் மற்றும் வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும். வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை உடனடியாக குறைந்துவிடும். இது போன்ற பிரச்சினைகளை தேர்தல் பரப்புரையின்போது மக்களிடம் கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி!

ABOUT THE AUTHOR

...view details