சென்னை ஐஐடியில் பயின்றுவந்த மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ”மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் ஒரு பாதுகாப்பற்ற, பரிதாபகரமான சூழல் நிலவிவருவதாகவே கருதவேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதை தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது. சமூக நிலையில் பலவீனமான, ஒடுக்கப்பட்ட சாதியினராவும், மதச் சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்குமே இந்த துயரம் ஏற்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.