தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது மகிழ்ச்சி! - முத்தரசன்

சென்னை: வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 9, 2019, 6:58 PM IST

Updated : Aug 9, 2019, 7:39 PM IST

CPI Mutharasan

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். இதற்கு கூட்டணி கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி
  • வேலூர் மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின்போதே திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
  • இந்நிலையில் மீண்டும் தேர்தல் அறிவித்தபோது தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், வேலூர் தொகுதி மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பேராதரவைப் பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை வெற்றிபெறச் செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Last Updated : Aug 9, 2019, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details