தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல்துறையினர் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்! - vote

சென்னை: காவலர்கள் தாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் உரிமையை தலைமை தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

By

Published : Apr 6, 2019, 7:58 PM IST

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு காவல்துறையில் பணியாளர்கள் உள்ளனர். நடைபெறும் 17வது நாடாளுமன்றத் தேர்தலில், அவர்கள் அந்தந்த மாவட்ட காவல் தலைமையகங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பிற துறைகளில் இல்லாத புதியவகை ஏற்பாடாகும். சென்ற தேர்தலிலும் இதே முறை கடைப்பிடிக்கப்பட்டது. வாக்களிக்க அனுமதிக்காமல், வெற்று தபால் வாக்குப் படிவங்களில் காவலர்களிடம் கையெழுத்தை மட்டும் வாங்கிக் கொள்ளப்படுகிறது. பிறகு உயர் அதிகாரிகள் தாமே அனைத்துப் படிவங்களிலும் டிக் செய்து வாக்களித்து மொத்தமாக வாக்குப் பெட்டியில் சென்றமுறை சேர்த்தார்கள். இப்போதும், அதே நடைமுறையைக் கடைப்பிடிக்க ஆயத்தம் செய்யப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளன.

ஆகவே, தலைமைத் தேர்தல் அதிகாரி இப்பிரச்னையில் உடனடியாக தலையிட வேண்டும். மாவட்ட காவல் தலைமையகங்களில் வாக்குச்சீட்டைச சேர்க்கும் முறையை கைவிடச் செய்ய வேண்டும். மற்ற அரசுப் பணியாளர்கள் போல வாக்களிக்கவும், காவலர்கள் தாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தவும், சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடப்பதற்கு காவல்துறை மட்டத்திலேயே தடை ஏற்படுவதை விலக்கவும், தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமைத் தேர்தல் ஆணையரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details