சென்னை:தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்திருந்தது.
அதன் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கிவருகிறது. மக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.
கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன இந்த நிலையில் புனேவில் இருந்து இரண்டு விமானங்கள் மூலம் 112 பார்சல்களில் 13 லட்சத்து 53 ஆயிரத்து 160 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.
இதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர். மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள் இந்த தடுப்பூசிகளை பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க:இந்தியாவில் ஒரு நாளில் 28 ஆயிரம் பேருக்கு கரோனா