சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பூசியான 'கோவிஷீல்ட்' பரிசோதனை தொடங்கியுள்ளதாக, மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் 'கோவிஷீல்ட்' பரிசோதனை தொடக்கம்!
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பூசியான 'கோவிஷீல்ட்' பரிசோதனை தொடங்கியுள்ளதாக, மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கரோனா தடுப்பூசி 'கோவிஷீல்ட்'யை தமிழ்நாட்டில் பரிசோதனை செய்வதற்காக தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுவந்தனர். கரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை போட்டுக் கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ள தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் விதிமுறைகளின்படி பரிசோதனை மேற்கொள்ளப்படுவார்கள்.
18 வயதுக்கு மேற்பட்ட கரோனா நோய் தாக்காத, எதிர்ப்பு சக்தி ஏற்கெனவே உருவாகாத நபர்களுக்கு இந்தத் தடுப்பு மருந்து வழங்கப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல் கட்டமாக, தலா 150 பேருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்படவிருக்கிறது.
முதல் டோஸ் பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்திலேயே வைத்து வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் மத்திய அரசு 'கோவிஷீல்ட்' பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறியது. அதனைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசு 'கோவிஷீல்ட்' தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 'கோவிஷீல்ட்' தடுப்பூசி பரிசோதனை தொடங்கியுள்ளது. முதல் டோஸ் வழங்கப்பட்ட பின்னர், அடுத்த டோஸ் வழங்கப்படும் என மருத்துவத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, ஒரு மாதத்திற்குள் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பு மருந்து போடப்படுபவர்கள் ஆறு மாதங்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள்.
தடுப்பு மருந்தினால் பாதிப்பு ஏற்படுகிறதா என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், தடுப்பு மருந்தினால் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதா என ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின் முடிவுகள் மத்திய அரசிற்கு அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.