சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், மத்திய அரசும், மருத்துவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு
தடுப்பூசியை கண்டு தொடக்கத்தில் மக்கள் அச்சம் கொண்டனர். ஆனால் தற்போது, மிகுந்த ஆர்வத்துடன் செலுத்திக் கொள்கின்றனர். அதிக மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதால், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக, வெளிநாடுகளிடமிருந்தும், வெளி மாநிலங்களிடமிருந்தும் தடுப்பூசியினை வரவழைப்பதற்காக, மத்திய அரசிடம் கோரிக்கையை வைத்துள்ளது.
மத்திய அரசிடம் கோரிக்கை
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் முந்தியடித்துச் செல்கின்றனர்.