சென்னை:பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் மார்ச் 25ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 32 ஆயிரத்து 237 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் இருந்த 37 நபர்கள் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர் என்பது தெரிய வந்தது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 829 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
மேலும் 446 பேருக்கு சிகிச்சை:இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 52 ஆயிரத்து 612 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 66 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 141 என உயர்ந்துள்ளது.