சென்னை:கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க, அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மாநில, ஒன்றிய அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, மக்கள் தடுப்பூசி போடுவதை எளிதாக்கும் விதமாக மருத்துவமனைகள், பொது இடங்களில் சமூக இடைவெளியுடன் கூடிய சிறப்புத் தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகின்றது.
தடுப்பூசி செலுத்தியவர்கள்
தமிழ்நாட்டில், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.
இதுவரை, நான்கு வாரங்கள் நடைபெற்றுள்ள இந்த மெகா தடுப்பூசி மூகாமில் மட்டும் 87 லட்சத்து 80 ஆயிரத்து 262 பயானிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் அரசு, தனியார் மையங்களின் மூலம் (அக். 8 நிலவரப்படி) 5 கோடியே ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 323 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.