மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு வைகோ இன்று கோரிக்கை மனு அளித்தார். அதில், “கோவிட்-19 நோய்த்தொற்று பரவியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில், உயிர் காக்கும் காற்றோட்டக் கருவி (வென்டிலேட்டர்), அடிப்படைத் தேவையான மருத்துவக் கருவிகள் ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதேபோலப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, பிரித்தானிய முடியரசு ஒன்றியம் ஆகிய நாடுகள், மருத்துவக் கருவிகளை உருவாக்குகின்ற, மருத்துவ வசதிகளை வழங்குகின்ற நிறுவனங்களுடன் பேசி, தங்களுக்கு வேண்டிய கருவிகளை உடனே பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.