தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கேரள விமான பயணிகளுக்கு கரோனா பரிசோதனை - Kerala air travelers

இன்று முதல் சென்னை வரும் கேரள விமான பயணிகளை, கட்டாய கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே வெளியேற அனுமதிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று சென்னை வந்த அனைத்து கேரள விமான பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

v
கரோனா பரிசோதனை

By

Published : Aug 5, 2021, 4:56 PM IST

சென்னை: கேரளாவில் உருமாறிய கரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து, தமிழ்நாட்டுக்குள் வருபவா்களுக்கு இன்று (ஆக.5) முதல், கரோனா வைரஸ் நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் கேரளாவில் இருந்து விமானங்கள் மூலம் தமிழ்நாட்டிற்குள் வரும் பயணிகளிடமும் மருத்துவ பரிசோதனை நடத்திய பிறகே அனுமதிக்க, தமிழ்நாடு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று (ஆக. 5) முதல் அனைத்து பயணிகளும், கரோனா நெகடிவ் சான்றிதழ் பரிசோதனைக்கு பின்னரே விமானநிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.

கரோனா நெகடிவ் சான்றிதழை காண்பிக்கும் பயணி

நெகடிவ் சான்றிழ் கட்டாயம்

சான்றிதழ்கள் இல்லாமல் வரும் பயணிகள், ஆர்.டி - பி.சி.ஆர் (RT-PCR) பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுகின்றனா். இல்லையென்றால் கரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 14 நாள்கள் நிறைவடைந்தவர்கள் ஆகியோரும் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.

கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களிலிருந்து, நாள் ஒன்றுக்கு 7 விமானங்கள் சென்னை வருகின்றன. அதில் வருபவர்களை கண்காணித்து ஆய்வு செய்வதற்காக, செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை உள்நாட்டு விமானநிலையத்தில் 30 பேரை பணியமர்த்தியுள்ளது. அவர்கள் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, கரோனா நெகடிவ் சான்றிதழ் உடைய பயணிகளே, கேரள விமானங்களில் பயணிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதே போல் கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளும், ஆர்.டி - பி.சி.ஆர் (RT-PCR) நெகடிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று முதல், சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகளிடம் கரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே, பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'மக்களை தேடி மருத்துவம்' - பயனாளிகளின் இல்லம் தேடிச் சென்ற ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details