தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்பு எம்எல்ஏக்களுக்கு கோவிட்-19 கண்டறிதல் சோதனை! - covid-19 test for MLA before assembly session

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேவைப்பட்டால் அனைத்து உறுப்பினர்களுக்கும் கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்பு எம்எல்ஏக்களுக்கு கோவிட்-19 கண்டறிதல் சோதனை!
சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்பு எம்எல்ஏக்களுக்கு கோவிட்-19 கண்டறிதல் சோதனை!

By

Published : Aug 26, 2020, 10:31 PM IST

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா வைரஸ் கண்டறிதல் சோதனை செய்து கொள்பவர்களுக்கு (குறுஞ்செய்தி) எஸ்.எம்.எஸ் மூலம் முடிவுகளை அறிவிக்கும் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா தொற்று காலத்திலும் அரசு கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் 63 ஆய்வகங்கள் மற்றும் 78 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 141 ஆய்வகங்கள் மூலம் இதுவரை 43 லட்சத்து 46 ஆயிரத்து 861 பேருக்கு கண்டறிதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் 1 லட்சத்து 91 ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய அளவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான கரோனா கண்டறிதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுநாள் வரை ஆர்.டி.பி.ஆர் கண்டறிதல் சோதனை செய்து கொண்டவர்களுக்கு எஸ்.ஆர்.எப் என்ற சோதனை படிவ எண் வழங்கப்பட்டு வந்தது. அந்த எண்ணைக் கொண்டு பரிசோதனை மையத்திற்கு சென்று முடிவினை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், தற்போது தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதியமுறையின் மூலம் பரிசோதனை செய்யும் போது நோயாளி அல்லது அவரை சார்ந்த நபரின் செல்போன் எண் பெற்றுக் கொள்ளப்படும். 24 மணி நேரத்திற்குள்ளாகவே, அந்த செல்போன் எண்ணிற்கு பரிசோதனை முடிவுகளை எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறையால் கால தாமதமின்றி பரிசோதனை முடிவு கிடைக்கப் பெறுவதால் உடனடியாக சிகிச்சை பெற முடியும். நோயாளிக்கு ஏற்படும் மன உளைச்சல் குறையவும் உதவியாக உள்ளது. இந்த புதியமுறை அனைத்து பரிசோதனை மையங்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கட்டுக்குள்தான் உள்ளது. பொதுமக்கள் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டவுடன் உடனடியாக சிகிச்சைக்கு வர வேண்டும்தாமதமாக சிகிச்சை வருவதுதான் மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது. மூச்சுத்திணறல், ஆக்சிஜன் அளவு குறைந்த பின் வரும் நோயாளிகளை சிகிச்சை அளித்து காப்பாற்றுவதில் சிரமம் உள்ளது என்பதை புரிந்துக்கொண்டு பொதுமக்கள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வரவேண்டும்.

தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரிசோதனை செய்துக்கொள்கின்றனர். ஆனாலும் தேவைப்பட்டால் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன் உறுப்பினர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படும். உரிய பரிசோதனைகள், காய்ச்சல் முகாம்கள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details