தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் கரோனா... பாதிப்பு 79ஆக உயர்வு! - சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு

சென்னை ஐஐடியில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் கரோனா
சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் கரோனா

By

Published : Apr 25, 2022, 7:35 PM IST

சென்னை:சென்னை ஐஐடியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கி படிக்கும் மூன்று மாணவிகளுக்கு கடந்த 20ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 18 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில், 9 மாணவர்களுக்குப் பாதிப்பு உறுதியானது.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று வரை (ஏப்ரல் 24) 60 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. மேலும் தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் இன்று (ஏப்ரல் 25) மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் சென்னை ஐஐடியில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஐஐடியில் ராதாகிருஷ்ணன் ஆய்வு

இந்தநிலையில், சென்னை ஐஐடியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட மாணவர்களைச் சந்தித்துப் பேசினார். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

சென்னை ஐஐடியில் ராதாகிருஷ்ணன் ஆய்வு

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "சென்னை ஐஐடி வளாகத்தில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்று 687 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அனைவருக்கும் பரிசோதனை செய்து முடிக்கப்படும். அதேபோல், மாநிலத்தில் கரோனா அறிகுறி உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவில் நேற்றை விட இன்று கரோனா பாதிப்பு குறைவு!

ABOUT THE AUTHOR

...view details