தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணை நிவாரணம்' - தமிழ்நாடு அரசு - COVID 19 Rs.2000 cash relief for Transgender

கரோனா நிவாரண நிதியுதவித் தொகையான 4,000 ரூபாயில் திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணையாக ரூ.2000 நிவாரணத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணையாக ரூ.2000 நிவாரணம்
திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணையாக ரூ.2000 நிவாரணம்

By

Published : Jul 9, 2021, 3:28 PM IST

சென்னை: திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதற்காக இன்று (ஜூலை.9) ரூ. 1,71,82,000 ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணத் தொகையாக ஏற்கனவே தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டை வைத்திருக்கும் 2956 பேருக்கு தலா ரூபாய் 2000 நிவாரணம் வழங்கப்பட்டது.

மேலும், ரேஷன் அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு, திருநங்கைகள் நல வாரியத்தில் பதிவு செய்திருந்த 8,493 பேருக்கு தலா ரூ.4000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாம் தவணையாக திருநங்கைகள் வாரியத்தில் பதிவு செய்திருந்த 8591 திருநங்கைகளுக்கு தலா 2000 ரூபாய் இரண்டாம் தவணையாக வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேகதாது - அனைத்துக்கட்சி கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details