பெரும்பாலும் கரோனா வைரஸ் மக்கள் திரள் அதிகமாகக் காணப்படும் பெருநகரங்களில்தான் தன் தீவிரத்தைக் காட்டிவருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னையில் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவிவருகிறது. இந்தப் பரவலைத் தடுக்க ஜூலை 5ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும் மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவருகிறது. அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதே இதற்குக் காரணம் என மாநகராட்சி தெரிவிக்கிறது. நேற்று (ஜூலை 4) மட்டும் 11 ஆயிரத்து 114 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.