சென்னை: மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஆக. 5) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவல், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 149 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,995 நபர்களுக்கும், மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு வந்த இரண்டு நபர்களுக்கும் என மொத்தம் 1,997 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 73 லட்சத்து 34 ஆயிரத்து 452 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 25 லட்சத்து 69 ஆயிரத்து 398 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 138 பேர் உள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 1,943 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 15 ஆயிரத்து 30 என உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 28 நோயாளிகளும் என 33 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 230 என உயர்ந்துள்ளது.
கோயம்புத்தூரில் புதிதாக 220 நபர்களுக்கும்,சென்னையில் 196 நபர்களுக்கும், ஈரோட்டில் 161 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 130 நபர்களுக்கும், தஞ்சாவூரில் 119 நபர்களுக்கும், திருவள்ளூரில் 106 நபர்களுக்கும், திருப்பூரில் 97 நபர்களுக்கும் என அதிக அளவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 5,39,105
கோயம்புத்தூர் - 2,30,463
செங்கல்பட்டு - 1,62,584
திருவள்ளூர் - 1,13,910
சேலம் - 93,804
திருப்பூர் - 88,261
ஈரோடு - 94,521
மதுரை - 73,615
காஞ்சிபுரம் - 71,919
திருச்சிராப்பள்ளி - 72,795
தஞ்சாவூர் - 68,434
கன்னியாகுமரி - 60,243
கடலூர் - 60,787
தூத்துக்குடி - 55,178
திருநெல்வேலி - 47,995
திருவண்ணாமலை - 52,278
வேலூர் - 48,176
விருதுநகர் - 45,565