சென்னை:மக்கள் நல்வாழ்வுத் துறை நேற்று (பிப். 19) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 52 ஆயிரத்து 524 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 445 நபர்களுக்கும், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மூன்று நபர்களுக்கும் என மொத்தம் 448 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 67 லட்சத்து ஐந்தாயிரத்து 58 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் எட்டு லட்சத்து 47 ஆயிரத்து 385 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் நான்காயிரத்து 147 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 467 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 30 ஆயிரத்து 787ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் நான்கு நோயாளிகளும், அரசு மருத்துமனையில் மூன்று நோயாளிகளும் என மொத்தம் ஏழு பேர் இறந்துள்ளனர். இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 451ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்திலிருந்து ஜனவரி 8ஆம் தேதிமுதல் பிப்ரவரி 19ஆம் தேதிவரை இரண்டாயிரத்து 219 நபர்கள் வந்தனர். அவர்களில் 12 பேருக்கு கரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இங்கிலாந்திலிருந்து வந்தவர்களில் எட்டு நபர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும், மதுரைக்கு வருகைதந்த இரண்டு இங்கிலாந்து பயணிகளுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, இங்கிலாந்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வருகைதந்த 36 நபர்களுக்குத் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் 11 நபர்களுக்கு உருமாறிய கரோனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
- சென்னை - 2,34,072
- கோயம்புத்தூர் - 55,368
- செங்கல்பட்டு - 52,356
- திருவள்ளூர் - 43,992
- சேலம் - 32,632
- காஞ்சிபுரம் - 29,421
- கடலூர் - 25,102
- மதுரை - 21,181
- வேலூர் - 20,917
- திருவண்ணாமலை - 19,455
- தேனி - 17,140
- தஞ்சாவூர் - 17,954
- திருப்பூர் - 18,214
- விருதுநகர் - 16,636
- கன்னியாகுமரி - 17,014
- தூத்துக்குடி - 16,333
- ராணிப்பேட்டை - 16,201
- திருநெல்வேலி - 15,689
- விழுப்புரம் - 15,245
- திருச்சிராப்பள்ளி - 14,912
- ஈரோடு - 14,692
- புதுக்கோட்டை - 11,628
- கள்ளக்குறிச்சி - 10,903
- திருவாரூர் -11,309
- நாமக்கல் -11,765
- திண்டுக்கல் - 11,396
- தென்காசி - 8,504
- நாகப்பட்டினம் - 8,562
- நீலகிரி - 8,308
- கிருஷ்ணகிரி - 8,129
- திருப்பத்தூர் - 7,622
- சிவகங்கை - 6,740
- ராமநாதபுரம் - 6,450
- தருமபுரி - 6,642
- கரூர் - 5,483
- அரியலூர் - 4,720
- பெரம்பலூர் - 2,281
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 946
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,043
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428